மோடி

தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, சென்னை வந்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதம் மோடி, தற்போது சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஆகியோர் வரவேற்றனர்.

பின்பு ஹெலிகாப்டர் மூலம் கோவளம் வந்தடைந்த மோடி, அங்குள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் விடுதியில் தங்கவுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுபெறட்டும்” தமிழிலேயே தனது மகிழ்ச்சிகளை தெரிவித்துள்ளார்.

மேலும் கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் கூறியுள்ளார்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …