இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி, ஐ.ஜி. அலோக் மிட்டல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் என்.ஐ.ஏ. ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறியதாவது:-
தேசிய புலனாய்வு அமைப்பு இதுவரை இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேரை கைது செய்துள்ளது. இவர்களில் 33 பேர் தமிழ்நாட்டையும், 19 பேர் உத்தரபிரதேசத்தையும், 17 பேர் கேரளாவையும், 14 பேர் தெலுங்கானா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள், தாங்கள் இலங்கை தேவாலய ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட சாஹரன் ஹாஷிம் வீடியோக்களை பார்த்து ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்களாக மாறியதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.
நாடு முழுவதும் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான வழக்குகளில் கைதானவர்கள் பெரும்பாலும் தப்பி ஓடிய இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஜாகிர் நாயக் வீடியோக் களை பார்த்து ஐ.எஸ்.
ஆதரவாளர்களாக மாறியதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். எனவே ஜாகிர் நாயக் மீதும், அவரது அமைப்பான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்வது தொடர்பான முக்கிய வழக்கில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள், பிரிவினைவாத இயக்கங்களின் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் யாருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மூலமும், ஹவாலா மூலமும் பணம் வழங்கப்பட்டு உள்ளது.
சீக்கியர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு பிரசார இயக்கம் நடத்தி சீக்கிய இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்து உள்ளனர்.
இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ‘2020 வாக்கெடுப்பு’ என்ற பிரசாரம் மூலம் இந்த இயக்கத்தில் சேர்ந்ததாக ஒப்புக்கொண்டு உள்ளனர். பஞ்சாபில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிக்க எல்லைக்கு அப்பால் இருந்து தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அலோக் மிட்டல் கூறினார்.
என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி கூறியதாவது:-
பாகிஸ்தானை தவிர்த்து இப்போது வங்காளதேசமும் பயங்கரவாதிகள் இந்தியாவுக் குள் ஊடுருவி தொல்லைகள் கொடுக்க முயற்சிக்கும் 2-வது எல்லை நாடாக உருவாகி வருகிறது. வங்காளதேசத்தின் ஜமாதுல் முஜாகிதீன் இயக் கத்தை சேர்ந்தவர்கள் பீகார், மராட்டியம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தங்கள் நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறார்கள்.
இதில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 125 பேரின் தகவல்கள் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் பாருங்க :
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்
சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு
“கீழடி அகழாய்வு பகுதியை இனிமேல் பொதுமக்கள் பார்வையிட முடியாது”
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,