இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து பிகில் திரைப்படம் முதலிடத்தில் உள்ளதாக பிரபல திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து பிகில் படம் முதலிடத்தில் இருப்பதாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கவுதமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “நேற்று வரை 40,000-க்கும் அதிகமானோர் பிகில் படத்தை வெற்றி திரையரங்கில் கண்டுகளித்துள்ளனர். இந்த வருடம் வெளியான படங்களிலிருந்து கிடைத்த வரி நீங்கலான வசூல், மொத்த வசூல், பார்வையாளர்களின் எண்ணிக்கை என அனைத்திலும் பிகில் படமே முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/VettriTheatres/status/1192752300164444162?s=20
இதையும் பாருங்க :
இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!
ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..
இதற்கு இம்ரான் கானுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் – மோடி பேச்சு
அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன்?
அயோத்தி தீர்ப்பு, பாஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி – காங்கிரஸ்!
அயோத்தி வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை – பிரதமர் மோடி