நடிகர் அக்ஷய்குமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக 2017ல் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாஜ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ப்ருத்விராஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் ப்ருத்விராஜ் சௌகானை பற்றிய படத்தில் மன்னர் ப்ருத்விராஜ் கேரக்டரில் அக்ஷய் குமாரும், சன்யோகிதா கேரக்டரில் மனுஷி சில்லாரும் நடிக்க உள்ளனர்.
இந்த படம் 2020ம் ஆண்டு தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பூஜைகளை நடிகர் அக்ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/akshaykumar/status/1195257864278773762?s=20
இதையும் பாருங்க :