மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர்.
288 உறுப்பினர்கள்ளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105 இடங்களிலும். சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது.
எனினும் முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியை முறித்துக் கொண்டன.
ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக 3 கட்சித் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே 3 கட்சிகளும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று சந்திக்கின்றனர்.
இன்றுக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்க :
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,