கஸ்தூரி
கஸ்தூரி

கோத்தபய பதவியேற்புக்கு எதிராக உண்ணாவிரதமா? கஸ்தூரி பதில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையின் புதிய அதிபராக நேற்று கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தபோது லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட மாதிரி தற்போது தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக தங்களுடைய அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தபய இலங்கையின் அதிபராக பதவியேற்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ’பதவியேற்றார் கோத்தா பய்யா. ….இதுவும் கடந்து போம். #தமிழ்வாழ்க#தமிழினம்ஓங்குக’ என்று பதிவு செய்திருந்தார்.
இலங்கை
இதற்கு ஒரு டுவிட்டர் பயனாளி, ‘ஏன் தைரியம் இருந்தால் அதற்கு ஒரு போராட்டம் பண்ணலாமே’ என்று கேட்க, அதற்கு கஸ்தூரி, ‘போராட்டம் என்ன, கடற்கரையிலே உண்ணாவிரதம் கூட இருக்கலாமே’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிலை அடுத்து ’இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருசில மணி நேரங்கள் மட்டுமே கடற்கரையில் இருந்த உண்ணாவிரதத்தை கிண்டலுடன் சுட்டிக்காட்டுவதாக கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.

எந்த பிரச்சனை என்றாலும் அதனை சுட்டிக்காட்டி பரபரப்பை ஏற்படுத்தி வரும் கஸ்தூரி, இந்த விஷயத்திலும் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாகவே தெரிகிறது

https://twitter.com/KasthuriShankar/status/1196622745758584832

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …