நித்யானந்தாவுக்கு தனிப்பட்ட சக்தி இல்லை, அவர் சித்து வேலைகளை செய்ய வசியக் கல் தான் காரணம் என திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து போது, கிராபிக்ஸ் வேலை செய்யும் குழுவை வைத்துக் கொண்டு தனது வீடியோக்களில் கிராபிக்ஸ் காட்சிகளைப் பதிவு செய்து வெளியிடத் தொடங்கினார்.
சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகின. இது ஒருபக்கம் இருக்க, நித்யானந்தா என் நோயைக் குணப்படுத்தினார், அவர் தொட்டாலே நோய் குணமாகி விடும் என்றும் செய்திகள் பரவின.
இந்த நிலையில்தான் அவரது குடும்ப நண்பர் ஒருவர், நித்யானந்தா பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நித்யானந்தா செய்யும் சித்து வேலைகளுக்கு அவரிடம் தனிப்பட்ட சக்தி எதுவும் இல்லை என்றும் கூறும் ஜெயராஜ், வசியக் கல் தான் காரணம் என்று அடித்துக் கூறி வருகிறார்.
துாத்துக்குடியைச் சேர்ந்த ஜெயராஜ் கடந்த 30 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் வசி்த்து வருகிறார். அங்கு நித்யானந்தா சாதாரண சிறுவனாக இருந்தபோதே ஜெயராஜுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு, சாமியார் ஒருவர் மூலம் வசியக் கல் வாங்குவதற்காக ரிஷகேஷ் சென்றுள்ளார் ஜெயராஜ். அதேபோன்ற வசியக் கல் நித்யானந்தாவிடமும் உள்ளதாகக் கூறுகிறார் ஜெயராஜ்.
வசியக் கல்லை நித்யானந்தா தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார் ஜெயராஜ்.
இதையும் பாருங்க :