பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கிரேண்பாஸ் – ஜோர்ஜ் வீதி பிரதேசத்தில் 3 ஆயிரத்து 950 ட்ரமடோல் போதை மாத்திரைகளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடையவர் என்பதுடன், கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.