சேலம்

சேலம் பகுதியில் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது.

இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும், கட்டிடங்களும் சில வினாடிகள் ஆட்டம் கண்டன.

இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளுக்கு ஓடினர். இந்த நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பியதால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

இதே போல் தற்போதும் நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …