திரையுலகம்

பிரபல குணசித்திர நடிகர் காலமானார். சோகத்தில் திரையுலகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவரும், மேடை நாடகக் கலைஞருமானா பாலா சிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67

நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் பாலாசிங் அதன் பின்னர் `புதுப்பேட்டை’, `விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, உள்பட பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலாசிங் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 1 மணி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே’ படத்தில் பாலாசிங் நடிப்பு வெகுவான பாராட்டுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாலாசிங் மறைவால் தமிழ் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …