கஸ்தூரி
கஸ்தூரி

இவர்கள்தான் தமிழகத்தின் விடிவெள்ளியா? – விஜய் ரசிகர்களை விமர்சித்த கஸ்தூரி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிருஷ்ணகிரியில் பிகில் படம் வெளியாக தாமதமானதால் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் பல திரையரங்குகளில் ஒரு மணிநேரம் தாமதமாகவே காட்சிகள் தொடங்கின. இப்படியாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கிலும் சிறப்பு காட்சிகள் தொடங்க தாமதமானதால் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் வெளியே சாலைகளில் இருந்த பலகைகளை உடைத்து தகறாரு செய்ய ஆரம்பித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி ”கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விஜய் எதிர்ப்பாளர்களோ? ஆதரவாளர்களோ? ஆனால் அனைவரும் இளைஞர்கள். ஒரு சினிமாவுக்காக பொது சொத்தை நாசம் செய்பவர்கள்தான் இந்தியாவின் எதிர்கால தூண்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1187677476094279680

இதையும் பாருங்க :

பிகில் – விமர்சனம்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …