அதிமுக

தயாரானது அதிமுக தேர்தல் அறிக்கை – விரைவில் வெளியீடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்து முடித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துள்ளனர். இதனை அடுத்து அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கியது.

இதற்காக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் அதற்கானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இப்போது பணிகள் முழுவதும் முடிந்து அறிக்கை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் தற்போதைய பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட்உள்ளதாகத் தெரிகிறது. திருத்தங்கள் எதுவும் இருப்பின் அவை சரி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …