மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்களை சித்தரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கயுள்ளார்.
டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.
வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதாநாயகன் நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர்.
படத்துக்கு ஏற்ப தன் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மேலும் இப்படத்தில் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,