அயோத்தி

அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அயோத்தியில் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

அந்த தீர்ப்பில், ‘சர்ச்சைக்குரிய 2.77 நிலம் இந்து அமைப்புகளுக்குச் செல்லும். சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்று நிருபிக்க இஸ்லாமிய அமைப்புகள் தவறவிட்டன.

அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது.

2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசால் நியமிக்கப்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படவேண்டும். அந்த அறக்கட்டளை மூன்று மாத காலத்துக்குள் அமைக்கப்படவேண்டும்.

அந்த அறக்கட்டளையில் நிர்மோகி அஹாரா அமைப்புக்கு பிரநிதிகள் இருக்கவேண்டும். அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம். கோயில் கட்டும் பணியை அறக்கட்டளை நிர்வகிக்கும்.

சன்னி வஃக்பு வாரியத்துக்கு அயோத்தியில் மாற்று இடமாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அந்த இடத்தை வழங்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

இதற்கு இம்ரான் கானுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் – மோடி பேச்சு

அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன்?

அயோத்தி தீர்ப்பு, பாஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி – காங்கிரஸ்!

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை – பிரதமர் மோடி

சமூக நல்லிணக்கத்திற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு – திருமாவளவன்!

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …