கர்நாடகா

கர்நாடகா இடைத்தேர்தல் – 11 இடங்களில் பாஜக முன்னிலை… ஆட்சியைத் தக்கவைக்கிறார் எடியூரப்பா…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கர்நாடகாவின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால், அங்கு எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்க நடவடிக்கையால் 17 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலியாக உள்ளது.

இதில் 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் 11 தொகுதியில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், தற்போது 11 வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளதால், கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைக்க அனுகூலமான நிலை உருவாகியுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …