செய்திகள்

News

திருப்பதி லட்டு விலை உயர்வு… சலுகை விலையும் ரத்து…பக்தர்கள் ஏமாற்றம் !

திருப்பதி

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு சலுகை விலையில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் திருப்பதி ஏழுமலையான் பணாக்கார கடவுளாக இருக்கிறார். பக்தர்களு வேண்டுதல்கள் நிறைவேறுவதால் மக்கள் காணிக்கைகள் அளிப்பதற்காகவும், ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காகவும் தினமும் லட்சக்கணக்கான் பக்தர்கள் திருப்பதிக்குக்கு செல்கின்றனர். இதில், 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்பவர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகிறது. இரு மலைப்பாதைகளில் இருந்து நடந்துவரும் தரிசன …

Read More »

சாம்பார் ஏரியில் 1,500 அழகிய பறவைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

சாம்பார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது… இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சாம்பார் ஏரியில் ஆண்டு தோறும் குளிர்காலங்களில் 10 முதல் 20 வகையான அழகிய வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தகவலறிந்து …

Read More »

சிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை

சிறுநீரக

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சிறுநீரக புற்றுநோய் கட்டியை, நவீன முறையில் அகற்றி சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த வீரம்மாள் என்பவர் வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுநீரகத்தில் பெரிய வடிவிலான புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து நவீன அறுவை சிகிச்சை முறையில் சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் …

Read More »

ஆணுடன் ஆண் பாலுறவால் பரவியது டெங்கு: அதிர்ச்சி தகவல்

டெங்கு

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு கொசுவால் மட்டுமே பரவும் இன்று இதுவரை மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் பாலுறவு கொண்டாலும் டெங்கு பரவும் என்ற அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் ஒருவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு வைரஸ் பரவியதை உறுதி செய்தனர். ஆனால், அவர் …

Read More »

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் – திமுக அறிவிப்பு

திமுக

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிக்க அக்கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு , துணைப்பொதுச்செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 65 மாவட்டச்செயலாளர்களும் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக …

Read More »

கரையை கடந்தது புல்புல்..

புல்புல்

புல்புல் புயல் மேற்கு வங்காளத்தை கடலோரத்தை ஒட்டி கரையை கடந்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருபெற்றது. அந்த புயலுக்கு “புல்புல்” என பெயரிடப்பட்டது. இந்த புயல் மணிக்கு 130 முதல் 140 கி.மீ.வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய கடலோர பகுதிகளை ஒட்டி புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் …

Read More »

சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய அதிமுக..

சுஜித்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு அதிமுக சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சமீபத்தில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் செலுத்தினர். இந்நிலையில் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோருக்கு அதிமுக சார்பாக …

Read More »

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் – ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், இது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் …

Read More »

அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி!

அயோத்தி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயோத்தியில் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் …

Read More »

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

சஜித்

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாசா, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக கோத்தபய ராஜபக்சே உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன …

Read More »