சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை கொட்டித் …
Read More »சுஜித்தின் பெற்றோரை சந்தித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆறுதல்
ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். …
Read More »குழந்தை சுஜித் உயிரிழப்பு
குழந்தை சுஜித் உயிரிழந்திவிட்டான் என்ற செய்தி தமிழகத்தையே கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது. எப்படியும் குழந்தை சுஜித் காப்பாற்றப்பட்டுவிடுவான் என்ற எண்ணத்தில், ஆசையில், விருப்பத்தில்தான் லட்சக்கணக்கான தமிழக மக்கள் நேற்றிரவு தூங்கச் சென்றிருப்பார்கள். எத்தனையோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்கள் தாண்டியும் நம்பிக்கையை சற்றும் தளராமல்தான் எல்லோரும் இருந்தார்கள். அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது …
Read More »ரிக் இயந்திரத்திற்கு பதில் போர்வெல்: இடைவிடாத மீட்பு பணி
சுர்ஜித்தை உயிருடன் மீட்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரண்டாவது ரிக் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தற்போது ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் மூலம் துளை போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக …
Read More »சுஜித்திற்காக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன். கழுவி ஊற்றிய ரசிகர்கள்
ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 45 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் …
Read More »Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. 6:00 pm குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 48 மணி நேரம் ஆகியுள்ளது. 5:54 pm ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்திற்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வருகை. 5:00 pm 100 அடிக்கு குழி தோண்டிய பின்னர் தீயணைப்பு …
Read More »காதலித்து ஏமாற்றிய இளைஞர் : ஆசிட் வீசிய இளம்பெண்!
கடந்த 6 மாதமாக காதலித்து விட்டு விலகிச் சென்ற இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஜீவன்கார் என்ற இடத்தில் வசித்து வருபவர் பைசாத். இஅவர் அப்பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக அப்பெண்ணுடன் பேசமல் தவிர்த்து வந்துள்ளார். அப்பெண் தன்னை …
Read More »ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி
காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதியில், உள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடினார். இந்த தீபாவளி பண்டிகையையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி …
Read More »அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு குழந்தையை மீட்க இந்த நிமிடம் வரை போராடிக் கொண்டிருக்கிறோம் உயர்நிலை வல்லுநர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர் முதலில் சிறுவனின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது சிசிடிவி காமிரா மூலம் கண்காணித்துக் கொண்டே கயிறை இறக்கினோம் ஒரு நிமிடம் கூட தங்குதடையின்றி குழுவினர் அனைவரும் போராட்டம் கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சி 3 முறை நழுவிவிட்டது கையில் கட்டியிருந்த கயிறு உருவி, சிறுவன் …
Read More »அனைவரது வாழ்விலும் நலங்களும் வளங்களும் பெருகட்டும்
அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என்றும், அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். இந்த தீபாவளி திருநாள் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குவதாக …
Read More »