வான்வெளியில் புதிய கருந்துளை ஒன்றை அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது. கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் கூறப்படுகிறது. தொலை நோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்த ஆய்வை மேற்கொண்ட போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் …
Read More »ஒரு சதம்… இரண்டு சாதனை…!
டி20 போட்டியில் சேஸிங்-கின் போது சதம் அடித்த முதல் கேட்பன் என்ற சாதனையை படைத்தார் பரஸ் கத்கா. சிங்கப்பூர்-நேபால்-ஜிம்பாவே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று சிங்கப்பூர்-நேபால் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சிங்கப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை அடித்தது. 152 ரன்களை …
Read More »இலங்கை அதிபர் தேர்தல் – முன்னாள் அதிபரின் மகன் போட்டி
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் சிறிசேனா மீண்டும் போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் ராஜபக்சே-வின் …
Read More »எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள்
இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியுள்ளனர். மும்பை தொடர் தாக்குதலை போல மேலும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பாகிஸ்தான் – இந்தியா எல்லைப்பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டரன் பகுதியில், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து …
Read More »காதல்… கல்யாணம்… ஓட்டம்… கணவரை தேடும் மனைவி.
காதல் மனைவியை பெங்களூருவில் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் சென்ற கணவரை தேடி மனைவி ஊர் ஊராக அலைந்து வருகிறார். சென்னை அடையாரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த செலின். அதே அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியைச் சேர்ந்த அருண் பணியாற்றி வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், செலின் சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள …
Read More »ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோடி உரையாற்றுகிறார்
ஐநாவின் 74-வது பொதுசபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநாவின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக தலைவர்களின் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த தகவலும் இருக்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்று பேசுவது இது 2-வது முறையாகும். …
Read More »விக்ரம் லேண்டர் பற்றிய தகவல் தெரியவில்லை – நாசா
சந்திரயான் 2 மூலன் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. இஸ்ரோ மூலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரானது சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நிலவில் தரையிரக்கப்பட்டது. லேண்டர் தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த …
Read More »பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி
இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவின் 42 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க சூழ்நிலைகள் சாதகமாக உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகரங்கள் கட்டமைக்கப்படுவதாகவும் கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவது பாதுகாப்பானது …
Read More »5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன. சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான …
Read More »விழுந்து நொறுங்கியது மிக்-21 போர் விமானம்..
மத்திய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்-21 விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானிகள் இருவரும், வெளியேறி பாராசூட் உதவியுடன் கீழே …
Read More »