செய்திகள்

News

பாஜகவில் இருந்து விலகினார் தமிழிசை செளந்திரராஜன்

தமிழிசை

தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்திரராஜன் அதுமட்டுமின்றி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார். தமிழக பாஜக தலைவராகவும் பாஜகவின் முக்கிய தலைவராகவும் விளங்கிய தமிழிசை செளந்திரராஜன் இன்று காலை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஒரு மாநிலத்தின் கவர்னர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும் என்ற் நிலையில் தமிழிசை செளந்திரராஜன் தனது கட்சி பதவியை ராஜினாமா …

Read More »

இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்

சசிகலா புஷ்பா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் பேட்டி அளித்த போது ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றும், திரையுலகில் ரஜினிக்கும் விஜய்க்கு மட்டுமே தற்போது போட்டி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்புதான் என்றும் கூறியிருந்தார் அதேபோல் விஜய்யின் தாயார் எழுதிய கடிதம் ஒன்றில் எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் …

Read More »

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை வரும் திங்கட்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிதம்பரத்தை …

Read More »

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 11,000 கன அடியாக உயர்வு

ஒகேனக்கல்லில்

மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் அணைகளின் நிலவரங்கள் …. கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 14 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர், தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 22 வது நாளாக குளிக்க …

Read More »

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி? முக ஸ்டாலின் அதிரடி திட்டம்

உதயநிதி

தன்னைப் போலவே தனது மகன் உதயநிதியும் சென்னை மேயர், திமுக இளைஞரணி செயலாளர் , அமைச்சர், துணை முதல்வர் மற்றும் முதல்வர் பதவி என படிப்படியாக வளர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதனை அடுத்து முதல் கட்டமாக திமுக இளைஞரணி பதவியை உதயநிதிக்கு கொடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவரை சென்னை மேயராக்க மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் …

Read More »

விண்வெளியில் இருந்து முதல் புகார்: விசாரணை நடத்துமா நாசா?

நாசா

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து முதல் முதலாக நாசாவுக்கு ஒரு புகார் வந்துள்ளது. அமெரிக்க, கனடா, ஜப்பான், ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அன்னே மெக்லைன் என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர் விண்வெளியில் இருந்தபோது குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்னே மெக்லைன் …

Read More »

அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

அருண் ஜெட்லி

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி பாஜக தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி நேற்று காலமானார். டெல்லியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் …

Read More »

முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம் – உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

ப.சிதம்பரம்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். சிபிஐ வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2007ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதாகவும், அதற்கு லஞ்சமாக பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதேசமயம் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து …

Read More »

யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது

யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது – கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிவரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலக திறப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். இன்று 22-08-2019 கிளிநொச்சியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்ற …

Read More »

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பேத்தி

அமெரிக்க

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானா டிரம்புக்கும் பிறந்த 3 வது குழந்தை எரிக். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு லாரா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு எரிக் கியுக் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிடவுள்ளார். இதற்காக வேலைகளில் 2வது முறையாக கர்பமுற்ற லாரா தீவிரமாக …

Read More »