மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிக்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். …
Read More »பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணையில் நீர் மட்டம் 94 புள்ளி 22 அடியாகவும், நீர் இருப்பு 24 புள்ளி 4 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 89 கன அடியாக உள்ளது. தற்போது விநாடிக்கு, 2ஆயிரத்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. …
Read More »இணையத்தில் வைரலாகும் நியூசி. மசூதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் கடிதம்
நியூசிலாந்தில் 2 மசூதிகளில் தாக்குதல் நடத்தி 51 பேரைக் கொன்ற தீவிரவாதி எழுதிய கடிதம் ஒன்று இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பிரண்டன் டாரண்ட் என்ற 28 வயதேயான தீவிரவாதி கைது செய்யப்பட்டான். பிரண்டன் மீது 51 பேரை கொலை செய்தது …
Read More »இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே
இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார். இலங்கையை பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி, கண்டி – அம்பாந்தோட்டை, குருணாகலை – திருகோணமலை …
Read More »காஷ்மீர் பேச்சின் எதிரொலியா? அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி??
காஷ்மீர் விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆளும் கட்சியினரும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்ததால் அரசு விருதை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது. மொத்தம் 201 கலைஞர்கள் விருதுகளை …
Read More »தமிழரின் புத்திசாலித்தனத்தால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளால் பாகிஸ்தான் தற்போது விடப்பட்டுள்ளதாக தெரிகிறது காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐநா நாடுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை பாகிஸ்தான் வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை அனைத்து நாடுகளும் நிராகரித்தன. பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, …
Read More »காவிரி தண்ணீர் கடலில்தான் கலக்கப் போகிறது – வைகோ ஆதங்கம்
சென்ற வருடம் முக்கொம்பில் உடைந்த அணையை சரி செய்யாததால் தற்போது காவிரிக்கு வரும் நீர் வீணாக கடலில்தான் கலக்க போகிறது என வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணை 1836ல் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் புதிய அணை ஒன்றை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த பணிகள் …
Read More »அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே..! ரஜினிக்கு ஆன்மீக வகுப்பெடுத்த கே.எஸ்.அழகிரி
அமித்ஷாவையும், மோடியையும் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக பாவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்திற்கான வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் அமித்ஷா, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக எடுத்த முடிவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியதுடன், …
Read More »மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்து விளையாடிய ஆசிரியை.. வெளியான அ தி ர்ச்சி தகவல்..!
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்த விளையாட்டு ஆசிரியையை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க சட்டப்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுடன் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் உ றவு வைத்து கொண்டால், (அவர்கள் ஒத்துழைப்புடன் உறவு வைத்து கொண்டாலும்) அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் சட்டம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இல்லினொய்ஸ் என்கிற பள்ளியில் விளையாட்டு ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஹேய்லே ரீனு, அந்த …
Read More »கனமழையால் 4 மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்வு
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, …
Read More »