செய்திகள்

News

தமிழகத்திற்கு 525 மின்சார பேருந்துகள்

தமிழகத்திற்கு

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக போக்குவரத்து துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.14 ஆயிரத்து 988 பேருந்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5 ஆயிரத்து 595 மின்சார பேருந்துகளை …

Read More »

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு

தங்கத்தின்

10 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 582 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து, 47 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் …

Read More »

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய கேரளா: வைரலாகும் வீடியோ

மீண்டும்

தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பல பகுதிகளில் விடாது கனமழை பெய்து வருகிறது. தற்போது கேரளாவின் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் மக்களவை தொகுதியான வயநாடு கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் வீடியோக்களும், வீடுகள் இடிந்துவிழும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும் எனவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி மத்திய அரசை …

Read More »

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய வைகோ

வைகோ

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள …

Read More »

இனத்தை அளித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எம்.பி. ஆகவில்லை

வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கே.எஸ்.அழகிரியின் கருத்து குறித்து வைகோ செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து, மாநிலங்களவையில் கடுமையாக எதிர்த்து பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை கொலை செய்த கட்சி என குற்றம் சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்ற நபர் எனவும், அமித்ஷாவின் தூண்டுதலால் தான் அவ்வாறு பேசினார் எனவும் குற்றம் சாட்டினார். …

Read More »

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள், ஈரான் நாட்டிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆடையை மூடியது சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. …

Read More »

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுமா? ப.சிதம்பரம் கேள்விக்கு அதிமுக எம்பி பதில்!

ப சிதம்பரம்

காஷ்மீரின் 70வது சிறப்புப் பிரிவை ரத்து செய்ததையும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் முடிவையும் எடுத்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 370ஆவது பிரிவை ரத்து செய்வது மற்றும் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை கூட காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இதனை செய்யும் முறை தவறு என்றும், மத்திய அரசு தனது மெஜாரிட்டியை பயன்படுத்தி அராஜகமாக இந்த நடவடிக்கை …

Read More »

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தான் முதல் குற்றவாளி: கூட்டணி கட்சிக்கு வேட்டு வைத்த வைகோ

வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காஷ்மீர் மாநிலத்தில் 370வது பிரிவை ரத்து செய்வது, இரண்டு யூனியன்களாக பிரிப்பது போன்ற நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ பதிவு செய்தார். இதனையடுத்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் …

Read More »

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஓஹியா மாகாணத்தில் உள்ள கிளப்பில், மர்ம ந்பர் ஒருவர் அங்கிருந்தவர்களை திடீரென சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். உடனே போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கு முன் டெக்ஸாஸில் உள்ள வால்மார்ட் …

Read More »