செய்திகள்

News

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில்

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கதால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பிலிப்பன்ஸின் வடக்கு தீவு பகுதியான படானஸ் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவான நிலையில், அடுத்த 20 நிமிடத்தில் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானீர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கதால் …

Read More »

பிரான்சில் டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு

பிரான்சில்

பிரான்ஸில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு …

Read More »

சேலம் பகுதியில் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி

சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும், கட்டிடங்களும் சில வினாடிகள் ஆட்டம் கண்டன. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளுக்கு ஓடினர். இந்த நில அதிர்வால் …

Read More »

வாலிபரை துப்பாக்கி முனையில் திருமணம் செய்யவைத்த கொடுமை

பீகார்

பீகாரில் துப்பாக்கி முனையில், ஒரு வாலிபரை மிரட்டி திருமணம் செய்யவைத்த கொடுமை நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் வினோத் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரயிலில் சென்றுள்ளார். அப்போது பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் வினோத்தை கடத்தி கொண்டு சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய …

Read More »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை

நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 143 விசைப்படகுகளில் சுமார் 400 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி முனிவேல், ஸ்டீபன்ராஜ், மணிகண்டன், …

Read More »

நாங்கள் போரிட்டால் ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் பலியாவார்கள்

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இரு தரப்பு ராணுவத்தையும் பலப்படுத்துவது குறித்து இருவரும் பேசி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை மறுத்தது அமெரிக்கா. இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றவரை அதிபர் ட்ரம்ப் வரவேற்றார். இரு நாட்டு ராணுவத்தையும் …

Read More »

ஹெச் ராஜாவுக்கு தமிழிசைப் போட்ட உத்தரவு

தமிழிசை

தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த மும்முரம் காட்டாத ஹெச் ராஜாவை தமிழிசை கடிந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையைத் துரிதப்படுத்த மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் ஆகும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பலரும் தமிழக பாஜகவில் உறுப்பினர் ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளோ அதற்கு நேர் எதிராக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் செயல் தலைவர் ஜேபி நாட்டா இதுபற்றி தமிழக …

Read More »

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு சல்மான் அரசர் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. இராக் போர் …

Read More »

என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி: சூர்யா அறிக்கை!

சூர்யா

ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு …

Read More »

அமெரிக்காவில் வீசப்போகும் வெப்ப அலை: எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

அமெரிக்கா

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த வானிலை நிலவ ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்த வார இறுதியில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம். சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ …

Read More »