முஸ்லீம் அமைச்சர்களையும் ஆளுனர்களையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தை மூன்றாவது நாளாக நடத்தி வருகின்றனர். நல்லவேளையாக இந்த உண்ணாவிரதம் இந்தியாவில் நடக்கவில்லை. இது நடந்தது இலங்கையில் என்பது குறிப்பிடத்தக்கது இலங்கையில் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குவும், இலங்கை நாடாளுமன்றத்தின் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் என்பவர் …
Read More »தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்
நெற் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பரவிச்செல்லும் படைப்புழு தொடர்பில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என விவசாயத் திணைக்களம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு முன்னர் படைபுழுவின் தாக்கம் பாரிய அளவில் காணப்பட்டது. எனினும் தற்போது, நெற் பயிர்களுக்கு படைபுழுவை ஒத்த புதிய வகை பீடைகளால் பாதிப்பு …
Read More »உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிளிநொச்சி – முருகன்டி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்துள்ள உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Read More »ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..!
சுதந்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது, அரசாங்கதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் காரணமாகவே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களை பிழையாக வழிநடத்தி சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் போலிப் பிரச்சாரங்கள் குறித்து கவலை அடைவதாகவும் …
Read More »கடவுச்சீட்டு கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள்
கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் ரூபா 2000 இல் இருந்து ரூபா 2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது. ஒரே …
Read More »பலாலி வானூர்தி நிலையத்தை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும்
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்காக, பலாலி வானூர்தி நிலையத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, விமானப் பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
Read More »டிக் டாக்கில் பிரபலமான மனைவி – கொலை செய்த கணவன் !
டிக்டாக்கில் எந்நேரமும் வீடியோ வெளியிட்டுக் கொண்டும் போனில் அதிகநேரம் பேசிக்கொண்டும் இருந்த பெண் ஒருவரை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. கோவையில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிளம்பர் கனகராஜ். இவரது மனைவி நந்தினி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கருத்துவேறுபாட்டால் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் தாய் நந்தினியிடம் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக நந்தினி …
Read More »ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பம்
அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இலங்கையில் இருந்து ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் அரசாங்கமே ஏதிலிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமுலாக்கியுள்ளது. இதனால் படகுமூலம் செல்கின்றவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதுடன், அரசியல் அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கின்றவர்கள் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் தொழில்கட்சி வெற்றி பெற்றால், …
Read More »உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
Read More »வௌிநாட்டு கடவுச்சீட்டு கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன
2019 ஆம் வருடத்திற்கான நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு யோசனைக்கு அமைய வௌிநாட்டு கடவுச் சீட்டு வௌியீட்டின் போது அறவிடப்படும் கட்டணம் நாளை தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி , 3000 ரூபாவாக காணப்படும் சாதாரண சேவை கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு வௌியிடப்படும் போது 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் …
Read More »