செய்திகள்

News

சோமாலியா வரைபடத்தில் காணாமல் போனது எப்படி?

சோமாலியா

எத்தியோப்பியா வெளியிட்ட வரைபடத்தில் சோமாலியா காணாமல் போனது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தயாரித்த வரைபடத்தில் பக்கத்து நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பியா வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்காக ஓர் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது அந்நாடு. அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்

பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம்

நாட்டின் பாதுகாப்பு பிரிவு, குழுவாக செயற்படாத காரணத்தினாலேயே பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முகம் கொடுக்க நேர்ந்ததாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா – கெலகொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு தரப்புக்கே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் தலைமைகளுக்கு இடையில் பிணக்குகள் இருந்தால், குழுவாக செயற்பட முடியாத நிலைமை ஏற்படும். காவற்துறை மா அதிபர், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கோ, …

Read More »

பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி..

பாரவூர்தியுடன்

ஹொரன – பெல்லபிடிய பிரதேசத்தில் நேற்றைய தினம் பாரவூர்தி மற்றும் உந்துருளி நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உந்துருளியாளர் உயிரிழந்துள்ளார். உந்துருளியாளர் மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதுண்ட குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

Read More »

அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

அவநம்பிக்கை பிரேரணை

அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். முதலில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமது பதவியில் இருந்து விலகி, அவர் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் கோரினார். எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமிடத்து, அவருக்கு எதிரான அவநம்பிக்கை …

Read More »

தேசிய அடையாள அட்டையை பெற்று வட்டிக்கு பணம் வழங்கியவருக்கு நேர்ந்த கதி

தேசிய அடையாள அட்டை

வெலிமடை – திமுத்துகமவில் ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை படையினரை பாரட்டியுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம்

இலங்கை

பயங்கரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த எந்த நாட்டுக்கும் முடியாது போயுள்ள சூழ்நிலையில், இலங்கையின் படையினர் இரண்டு வாரங்களில் பயங்கரவாத்தை சிறப்பாக முகாமை செய்துள்ளனர் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கலிகமுவ பகுதியில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற இரண்டு வாரங்களிலேயே தாக்குதல்தாரிகளுடன் சம்மந்தப்பட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் மேலும் நடைபெறாதிருக்கும் பொருட்டு சிறப்பான முகாமையை படையினர் மேற்கொண்டுள்ளனர். இது பாராட்டுக்குரியதாகும் என்று அவர் …

Read More »

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்

அவுஸ்திரேலியா

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 …

Read More »

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி

நைஜீரியாவில்

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ …

Read More »

ஸ்டாலினை இலங்கைக்கு அழைத்துள்ள விக்னேஸ்வரன்

ஸ்டாலினை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும், கசப்புணர்வையும் போக்கும் வகையில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றகழகம் செயற்பட்டவிதம் …

Read More »

இலங்கைக்கான சுற்றுலா தடையை தளர்த்திய சீனா!

சீனா

பயங்கரவாத தாக்குதலை அடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. தற்பொழுது இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு …

Read More »