செய்திகள்

News

பிரித்தானிய எதிர்கட்சி இலங்கைக்கு வலியுறுத்தல்

பிரித்தானிய

இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய எதிர்கட்சியான தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்கட்சி எதிர்காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் போது, தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கையில் தமிழர்கள் சுயஅபிலாசைகளும் உரிமைகளும் பெற்று வாழ்வதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் …

Read More »

மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை

மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மிகவும் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விசாகப் பூரணை தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடிய நாட்டில், இன்று கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். …

Read More »

வன்முறைகளுக்கான காரணத்தை வௌிப்படுத்திய சர்வதேச மன்னிப்பு சபை

சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது. சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்கள் என்பனவற்றை மீறியும், துஸ்பிரயோகங்கள் ஊடாக குற்றங்களைப் புரிந்தவர்கள் பொறுப்புக்கூறல் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு அல்லாது குற்றவாளிகள் …

Read More »

இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்

இந்தியா

இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மனித குண்டுகள் வெடித்ததில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் 2 உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய …

Read More »

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் …

Read More »

தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு

கோட்டாபய

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான …

Read More »

இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள

இவர்கள் வெறுமனே

இவர்களின் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த மண்ணே இவர்களின் முன் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்த மண்ணே அவர்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இம் மண்ணே இன்னுயிர் தந்து இவர்களை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இம் மண்ணே இவர்களின் உறவுகள் தோளில் ஆயுதம் ஏந்தி சமர் புரிந்ததும் இம் மண்ணே அவர்கள் உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும் தாங்கி நின்றதும் இம் …

Read More »

மனித எச்சங்களை பரிசோதனைக்காக அனுப்பிவைக்குமாறு உத்தரவு

மனித எச்சங்களை

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்காக அமெரிக்காவின் ப்ளோரிடா பீற்றா பகுப்பாய்வாகத்திற்கு அனுப்பிவைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் சதோச மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி முதலான இரு வழக்குகளும் இன்றைய தினம் மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இரண்டு வழக்கு விசாரணைகளும் எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More »

10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று..

10 ஆவது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது. இன்றைய 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு குழு தெரிவித்துள்ளது. …

Read More »