மே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப்போனோம் .முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை விட்டு உடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .. காயமடைந்தவர்கள் ஒரு புறம் இறந்தவர்களின் உடல்கள் என வேறுபாடற்று மருத்துவமனை இயங்கிய பாடசாலைவளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தது.நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் கண்முன்னே நடந்து கொண்டிருந்தன. எம் மால் எதுவும் செய்யமுடியவில்லை ஒரளவு எழுந்து நடக்ககூடியவர்களை இவ்விடத்தை …
Read More »விடுதலைப்புலிகளின் சீருடையுடன் முள்ளிவாய்க்காலில் எலும்புக்கூடு!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணத்துக்காகக் குழி தோண்டப்பட்டபோதே குறித்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூட்டுடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் காணப்படுகின்றன. இந்த எலும்புக்கூடு மற்றும் கைக்குண்டுகள் …
Read More »புலிகள் மீதான தடை மூலம் இந்திய அரசு கூறும் செய்தி என்ன?
புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஐந்து வருடத்திற்கு இந்திய அரசு நீடித்துள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் இவ் வேளையில் இந்திய அரசு இதனைச் செய்துள்ளது. புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று கூறிய இந்திய அரசு எதற்காக புலிகள் அமைப்பை தடை செய்கிறது. அதுவும் இன்னும் ஐந்து வருடத்திற்கு ஏன் தடை செய்ய வேண்டும்? இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்களை …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ள விக்னேஸ்வரன்
நாளை இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு
தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது …
Read More »கைதான யாழ் மாணவர்கள் பிணையில் விடுவிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் பீட்டர் போல்ட் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோப்பாய் காவல்துறையில் முன்னிலையாகுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார். யுத்த வெற்றியின் …
Read More »யுத்த வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா 19 ஆம் திகதி
30 வருடம் இந்நாட்டில் நிலவிய யுத்த நிறைவு வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்று மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.டீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
Read More »இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் சட்டத்தை மீறி அகதிகளாக வந்த இலங்கை தமிழர் குடும்பத்தினரை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்களே போராடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடேஷ் மற்றும் பிரியா இலங்கையிலிருந்து அகதிகளாக 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியா தப்பி வந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். தற்போது நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பிறகு …
Read More »