தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக ஆட்சியைக் கலைக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவர இருக்கிறார் என அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். தமிழக அரசியல் சூழ்நிலைகளை அவ்வப்போது தினகரன் மற்றும் அமமுகவினர் அவரை சந்தித்து அவ்வபோது தெரிவித்து வருகின்றனர். …
Read More »பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
சேவைத் தேவையின் அடிப்படையில் பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Read More »சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன. அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் நாட்டின் சில இடங்களில் வன்முறைகள் …
Read More »சமூகவலைத்தளங்கள் மீதான தடை தொடர்கிறது
சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய காவற்துறை தலைமையகத்தினால் விசேட காவற்துறை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில் …
Read More »விடுதலைப்புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை – மத்திய அரசு
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024-ம் ஆண்டு …
Read More »இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தி
வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தியிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். தற்போது படையினர் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சிலரின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை …
Read More »நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்கள்
குருநாகல் மற்றும் கம்பஹா பகுதிகளில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், காவற்துறை மா அதிபர், முப்படைகளின் கூட்டு பிரதானி ஆகியோர் கலந்துகொண்டனர். அசம்பாவிதங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படை …
Read More »ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்
நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது. ஐ.எஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான உயிர்களை காவு கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதல் இலக்காகும். அதனை தொடர்ந்து …
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன. சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். முள்ளிவாய்கால் நினைவு வாரம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் …
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல்மயப்படுத்த வேண்டாம் -வாசுதேவ
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளின் உணர்வுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதற்கு முழுமையான நேரத்தை செலவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து எழுந்த சாதாரண விடயங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் விளைவே …
Read More »