பாதுகாப்புத் தரப்பினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க பொதுமக்களிடம் கோரியுள்ளார். எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வின்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இணக்கப்பாட்டுடன் செயற்படுவது தொடர்பில், குறிப்பாக நாட்டின் புலனாய்வுத்துறை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறாத சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு இராணுவத்திற்கு இல்லை. அதற்காக வேறு குழுக்கள் உள்ளன. அந்தக் …
Read More »ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணம்
உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால், பயங்கரவாதம் தோற்றம் பெற்றிருக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Read More »தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை
பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை பிற்போட எதிர்ப்பார்ப்பார்களாயின் அது தீவிரவாதத்திற்கு சமாந்தரமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபர்கள் கைது செய்யப்படவேண்டியதே இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படை செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, …
Read More »இன்று உலக அன்னையர் தினம்
இன்று உலக அன்னையர் தினம். இந்நிலையில் உங்களின் வெற்றிக்கும், வேலைகளுக்கும் உங்கள் அம்மாவின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதை அழகான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்களுக்காக உங்கள் அம்மா செய்த தியாகங்களை நினைவு படுத்தி பாராட்டுங்கள். உங்களின் வாழ்வுக்கு அம்மா எப்படியொரு பொக்கிஷமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துங்கள்.
Read More »சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2019
முக்கிய வேட்பாளர்கள்: எச்.ராஜா (பாஜக)- கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் எச்.ராஜா (பாரதிய ஜனதா கட்சி ), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ் )போட்டிடுவதால் இத்தொகுதியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். …
Read More »விழுப்புரம் மக்களவை தேர்தல் 2019
முக்கிய வேட்பாளர்கள் :- வடிவேலு இராவணன் ( பாட்டாளி மக்கள் கட்சி) vs ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி ) விழுப்புரம் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 77% மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,77,835, இதில் வாக்காளர்கள் 14,27,874 உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,14,211, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,13,480. தற்போதைய தேர்தலில் …
Read More »தொடரூந்துடன் மோதுண்டு விபத்தில் சிக்கிய பேருந்து! படங்கள்
யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தி ரயில், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பஸ்ஸில் மோதியுள்ளது. இதன்போது குறித்த பஸ் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த ரயில் கடவையை கடக்க …
Read More »பொலிஸார் விடுக்கும் அவசர வேண்டுகோள் !
வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்மாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்கள் அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னர் அவை தொடர்பில் அருகில் உள்ள …
Read More »நாடுகடத்தப்பட்ட பலஸ்தீன் பிரஜை
இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு பயணித்த பலஸ்தீன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளார். 30 வயதுடைய நபரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »பாரவூர்தி மோதுண்டு ஒருவர் பலி
பாணந்துறை பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிற்றூந்தின் சாரதி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 56 வயதுடைய நுகேகொடை பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாணந்துறை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Read More »