சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அடுத்த வாரம் நடைப்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையின் போது, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் பலி
Read More »ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் பலி
சோமாலியாவில் அமெரிக்க யுத்த வாநூர்தி மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புண்லண்ட் மாகாணத்தில் உள்ள கோலிஸ் மவுண்டனிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற பிறிதொரு வான் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், புதிதாக தமது சட்டவிரோத குழுவிற்காக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை முன்னர் இணைத்து வந்ததாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
Read More »மன்னார் மனித புதைகுழிகள் குறித்த வழக்குகள் ஒத்திவைப்பு
மன்னார் – திருகேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அது குறித்த வழக்குகள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால், பதில் நீதவான் இ.ஹயஸ் பெல்டானோ …
Read More »பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு..
கட்டுநாயக்க சர்வரேத விமான நிலையை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் இதனை தெரிவிதுத்துள்ளார். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்
Read More »இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்
இலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக தேசிய பாதுகாப்பு முறைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் தேச எல்லைகள் ஊடாக உட்பிரவேசிப்பதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த 7 ஆம் திகதி முன்வைத்தது, அவ்வாறான பயங்கரவாத உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் …
Read More »ஏதிலிகளை வடக்கில் குடியேற்றுவது வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் – சிவாஜிலிங்கம்
பாகிஸ்தான் உள்ளிட்ட ஏதிலிகளை வடக்கு பகுதியில் குடியேற்றுவதானது, மக்கள் மத்தியில் வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை
Read More »மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிய ஒருவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 56 …
Read More »அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பை பறிப்பதற்கு நடவடிக்கை
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின், அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பு பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக் புற்றுநோய் தடுப்பு ஊசிகளைப் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி குறித்து பெண் மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். …
Read More »இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!
இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்கு அமையவே பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் நிறுவப்பட்டது. சர்வதேச …
Read More »மகிந்த பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை!
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியிருந்த விவாதத்தை மூன்றாவது நாளாகவும் நடாத்த இன்று நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தது. அதன்படி , ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், நாளைய தினமும் இந்த விவாதத்தை நடத்த ஒருமனதாக தீர்மானித்தனர். இதேவேளை , நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விரிவான ஆய்வொன்றிற்கும் மற்றும் விசாரணைக்கும் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ , பிரதமரிடம் கோரியிருந்தார். நாடாளுமன்றில் …
Read More »