செய்திகள்

News

கிளிநொச்சியில் ஆர்.பி.ஜி செல்கள் மீட்பு

ஆர்.பி.ஜி செல்கள்

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 2009 க்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய ஆர்.பி.ஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிப்பொருட்கள் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் ஆர்.பி.ஜி செல்களை மீட்டுள்ளனர். தாக்குதல்கள் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது ..

Read More »

ஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல்…!!

இந்தியா

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஆசியாவில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொயிட்டர் செய்தி பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தோனேசியா பாலி பிராந்தியம் மற்றும் மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பலத்த சேதம் பதிவாகியிருந்தது. 2002 இந்தோனேசியா பாலி பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 202 பேர் உயிரிழந்ததுடன், 209 பேர் காயமடைந்தனர். 2008 ஆம் …

Read More »

தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை …

Read More »

உயிரிழ்ந்தவர்களின் இறுதி சடங்கு இன்று

உயிரிழ்ந்தவர்களின் இறுதி சடங்கு இன்று

கந்தான – கட்டுவாபிடிய தேவாலயத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழ்ந்தவர்களின் இறுதி சடங்கு இன்று தேவாலய மயானத்தில் இடம்பெறுகின்றது.

Read More »

கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

ஜனாதிபதி

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று தேவாலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளை மிக விரைவில் …

Read More »

தாக்குதல்கள் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது ..

மேலும் இருவர் கைது

நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதல்களில் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 290 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின், சடலங்கள் தொடர்பான பிரேத, பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, சடலங்களை உறவினர்களிடம் கையளிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக …

Read More »

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

பலியானோரின்

நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 பேரினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Read More »

கவலை தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்

கவலை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்கதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு, ட்ரம்ப் தனது கவலையை வெளியிட்டுள்ளார். இந்தச் சந்தரப்பத்தில், இலங்கைக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால …

Read More »

அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்..

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பயங்கரவாத தடை தொடர்பான சரத்து மாத்திரம் உள்ளீர்க்கப்பட்டு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின்கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும், நாட்டு மக்களினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, காவல்துறையினருக்கும், இராணுவதினருக்கும் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று இரவு 8 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிந்த காவல்துறை ஊரடங்கு …

Read More »

03 நிமிடங்கள் மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி

இன்று காலை 8.30 முதல் 8.33 வரையான 03 நிமிடங்கள் தேசிய துக்க தினத்திற்காக மௌன அஞ்சலி இடம்பெறவுள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

Read More »