மறு அறிவித்தல் வரை கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டல் மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Read More »நாளை தேசிய துக்க தினம்
நாளைய தினத்தை(23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இழப்பீடு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் போது உயிரிழந்துள்ளவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனுடன் இறுதி சடங்குளுக்காக ஒரு லட்சம் ரூபாயை வழங்குதற்கு இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனுடன் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More »அவசர தகவல்களை அறிவதற்கு தொலைபேசி இலக்கங்கள்
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 176 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று …
Read More »பரிதாபமாக உயிரிழந்த டென்மார்க் குழந்தைககள்
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் டென்மார்க்கை சேர்ந்த Anders Holch Povlsen என்பவரின் மூன்று குழந்தைககள் உயிரிழந்துள்ளதாக டேலி மைல் இணைய பிரிவு தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்புக்கு முன்னர் தனது 04 குழந்தைகளுடன் தந்தை { Anders Holch Povlsen } புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »சகல தொடரூந்து சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானம்
இன்று இரவு பயணிக்கயிருந்த சகல தபால் தொடரூந்து சேவைகளையும் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Read More »யாழில் கண்காணிப்பு தீவிரம்
யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்களை அதிரடி படையினர் விசாரணை செய்வதுடன் , சந்தேகத்திற்கு இடமான பொதிகளையும் பரிசோதனை செய்கின்றார்கள். இதேவேளை யாழ்.புறநகர் பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் , மற்றும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் என்பவற்றுக்கு அருகிலும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். LIVE UPDATES : குண்டுவெடிப்பு …
Read More »குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசேட குழு நியமனம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் உண்மையை நிலையை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி விஜித மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோண் ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர். LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »இன்று இரவு 8 மணி தொடக்கம் ஊரடங்குசட்ட உத்தரவு
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாட்டின் பல பாகங்களில் காவற்துறை ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More »மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டு வெள்ளைக் கொடி கட்டி துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசதங்களில் வர்த்தாக நிலைங்கள் பூட்டப்பட்டு வெள்ளளைக் கொடி கட்டப்பட்டிருந்தன. அரச அலுவலகங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை போக்குவரத்து நடைபெற்ற போதிலும் பொதுக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வீதிகள் வெறிச்சோடிக் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,