செய்திகள்

News

இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

தலை நகர் கொழும்பு உட்பட  நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218  உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான …

Read More »

இலங்கை குண்டுவெடிப்பு: ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில்

இலங்கையில் உள்ள மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் இன்று காலை ஆறு இடங்களிலும் சற்றுமுன் இரண்டு இடங்களிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த குண்டுவெடிப்புக்கு கண்டும் கண்டனம் …

Read More »

“மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்”

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகம் அறிவித்திருந்தது. இந் நிலையிலேயே தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மறு அறிவித்தல் வரும் …

Read More »

பதறவைக்கும் இலங்கை தாக்குதல்: மோடியின் அதிரடி டுவீட்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் மக்கள் 100க் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் இலங்கையில் …

Read More »

அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்கவும் – சஜித்

சஜித்

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதுபோன்ற நெருக்கடி நிலையில் அமைதியை சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பார்வையிட்டதன் …

Read More »

உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி

உயிரிழந்தோர்

இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 வரை அதிகரித்துள்ளது.காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை தாக்குதல்கள் கூடுதல் அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஒரே குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் சொல்கின்றனர். இறந்த வெளிநாடடவர்களில் துருக்கியை சேர்ந்த இருவரும் , டர்ச் ஒருவரும் , ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதல் சி சி ரி வி யை புலனாய்வு …

Read More »

வெடிச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்வு

இந்தியா

* நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்த 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். * நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். * நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 …

Read More »

அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ்

அப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான குண்டுத் தாக்குதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களை கண்டித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

Read More »

மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு!

நாட்டின்

நாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்தும் விடுதிகளில் தங்கியிருக்க முடியும் எனவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

திட்டமிட்ட வெடிச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – பிரதமர்

ரணில் விக்ரமசிங்க

நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன். இந்த வெடிச்சம்பவங்களுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை அசாதாரண சூழ்நிலையில் நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும். நாடுபூராகவும் இடம்பெற்ற திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு அனுசரனைகள் …

Read More »