செய்திகள்

News

பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி

சத்தீஷ்கரில்

சத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் 5 பாதுகாப்புப் படையினரைக் கொன்ற நக்சலைட்டுகள் இன்று கொல்லப்பட்டனர். நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் கடந்த 9 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பகுதி பாஜக எம்.எல்.ஏ, பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் …

Read More »

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு

ரஜினி, கமல், அஜித், விஜய்

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே …

Read More »

உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – சூர்யா

சூர்யா, ஜோதிகா

பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். #LokSabhaElections2019 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், …

Read More »

புதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட கொரியா

கிம் இல்-சுங்

புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட …

Read More »

நோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங்

பாரிஸ் நகரில் தீ விபத்தால் சேதமடைந்துள்ள ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் இருக்கும் அதே இடத்தில் முன்பைவிட அழகாக புதிதாக மறுநிர்மாணம் செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி, திங்களன்று மாலை 06:43 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட, இந்தத் தீ விபத்தினால், இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன. இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட …

Read More »

வாக்குச்சாவடியில் செல்போனுக்குத் தடை – வீட்டிலேயே வைக்க அறிவுரை !

வாக்குச்சாவடியில் செல்போனுக்குத் தடை

வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு அனுமதி இல்லாததால் வீட்டிலேயே வைத்துவிட்டு அறிவுறுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் …

Read More »

9 மணி வரை இத்தனை சதவீதம் வாக்குப்பதிவா…. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!

9 மணி வரை

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏராளமான வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளதால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். …

Read More »

புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

மக்கள் போராட்டம்

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், …

Read More »

வவுனியா பண்டாரிகுளத்தில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

பாடசாலை மாணவன்

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்ததுடன் தந்தையார் (கிராமசேவையாளர்) கடமை நிமித்தம் அவரது பணிக்கு சென்றிருந்த சமயத்தில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தனிமையில் பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்துள்ளார். மதியம் 11.30 மணியளவில் தந்தை மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் மகன் தொலைபேசி …

Read More »

வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #VelloreConstituency வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ …

Read More »