நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மிகவும் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விசாகப் பூரணை தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடிய நாட்டில், இன்று கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். …
Read More »தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான …
Read More »இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள
இவர்களின் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த மண்ணே இவர்களின் முன் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்த மண்ணே அவர்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இம் மண்ணே இன்னுயிர் தந்து இவர்களை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இம் மண்ணே இவர்களின் உறவுகள் தோளில் ஆயுதம் ஏந்தி சமர் புரிந்ததும் இம் மண்ணே அவர்கள் உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும் தாங்கி நின்றதும் இம் …
Read More »முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் (புகைப்படத் தொகுப்பு)
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் இன்று, முள்ளிவாய்கால்,
Read More »மனித எச்சங்களை பரிசோதனைக்காக அனுப்பிவைக்குமாறு உத்தரவு
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்காக அமெரிக்காவின் ப்ளோரிடா பீற்றா பகுப்பாய்வாகத்திற்கு அனுப்பிவைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் சதோச மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி முதலான இரு வழக்குகளும் இன்றைய தினம் மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இரண்டு வழக்கு விசாரணைகளும் எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More »10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது. இன்றைய 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு குழு தெரிவித்துள்ளது. …
Read More »முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில் மிதயா
மே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப்போனோம் .முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை விட்டு உடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .. காயமடைந்தவர்கள் ஒரு புறம் இறந்தவர்களின் உடல்கள் என வேறுபாடற்று மருத்துவமனை இயங்கிய பாடசாலைவளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தது.நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் கண்முன்னே நடந்து கொண்டிருந்தன. எம் மால் எதுவும் செய்யமுடியவில்லை ஒரளவு எழுந்து நடக்ககூடியவர்களை இவ்விடத்தை …
Read More »விடுதலைப்புலிகளின் சீருடையுடன் முள்ளிவாய்க்காலில் எலும்புக்கூடு!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணத்துக்காகக் குழி தோண்டப்பட்டபோதே குறித்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூட்டுடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் காணப்படுகின்றன. இந்த எலும்புக்கூடு மற்றும் கைக்குண்டுகள் …
Read More »புலிகள் மீதான தடை மூலம் இந்திய அரசு கூறும் செய்தி என்ன?
புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஐந்து வருடத்திற்கு இந்திய அரசு நீடித்துள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் இவ் வேளையில் இந்திய அரசு இதனைச் செய்துள்ளது. புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று கூறிய இந்திய அரசு எதற்காக புலிகள் அமைப்பை தடை செய்கிறது. அதுவும் இன்னும் ஐந்து வருடத்திற்கு ஏன் தடை செய்ய வேண்டும்? இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்களை …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »