இலங்கை

இலங்கை

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது

பயங்கரவாதி

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ள விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால்

நாளை இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கைதான யாழ் மாணவர்கள் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் பீட்டர் போல்ட் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோப்பாய் காவல்துறையில் முன்னிலையாகுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார். யுத்த வெற்றியின் …

Read More »

யுத்த வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா 19 ஆம் திகதி

விழா

30 வருடம் இந்நாட்டில் நிலவிய யுத்த நிறைவு வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்று மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.டீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

Read More »

பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

வெடிப்பு

சேவைத் தேவையின் அடிப்படையில் பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Read More »

சமூகவலைத்தளங்கள் மீதான தடை தொடர்கிறது

தடை தொடர்கிறது

சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய காவற்துறை தலைமையகத்தினால் விசேட காவற்துறை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில் …

Read More »

இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தி

விசேட செய்தி

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தியிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். தற்போது படையினர் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சிலரின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்‍தை பயன்படுத்தி வருகின்றனர். தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை …

Read More »

நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்கள்

பிரதமர்

குருநாகல் மற்றும் கம்பஹா பகுதிகளில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், காவற்துறை மா அதிபர், முப்படைகளின் கூட்டு பிரதானி ஆகியோர் கலந்துகொண்டனர். அசம்பாவிதங்கள் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படை …

Read More »

ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்

பயங்கரவாத அபாயம்

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது. ஐ.எஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான உயிர்களை காவு கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதல் இலக்காகும். அதனை தொடர்ந்து …

Read More »

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது

முள்ளிவாய்கால்

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன. சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். முள்ளிவாய்கால் நினைவு வாரம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் …

Read More »