திக்வெல்ல – யோனகபுர பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2500 சிம் அட்டைகளுடன் முஸ்லிம் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் திக்வெல்ல காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தான் சிம் விற்பனை பிரதிநிதியொருவராக செயற்பட்டவர் என குறித்த நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். எனினும் , அது தொடர்பில் விடயங்களை உறுதிப்படுத்தி கொள்ள முடியாமையினால் திக்வெல்ல காவற்துறையினர் சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 2500 …
Read More »ஈய குண்டுகளுடன் ஒருவர் கைது
காலி கோட்டை அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 669 ஈய குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி காவற்துறை மற்றும் கடற் படையினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சந்தேகத்திற்கிடமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யுங்கள் – கொதித்தெழுந்த இரா – சம்பந்தன்
Read More »முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யுங்கள் – கொதித்தெழுந்த இரா – சம்பந்தன்
மட்டக்களப்பு – வவுணத்தீவில் வைத்து காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டும் பிரிதொரு காவல் துறை உத்தியோகத்தர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கதிர்காமதம்பி இராசகுமாரன் என அழைக்கப்படும் அஜந்தனை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாகொடவிடம் கடிதம் ஒன்றின் மூலம் அவர் …
Read More »முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதியே முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்தன. எனினும் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்குமான விடுமுறைகள் நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நோன்பு …
Read More »எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம்
எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிள்ளார். இந்தநிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த விவாதத்தை …
Read More »பயணிகளின்றி காட்சி தரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்…!
இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாளாந்தம் சுமார் 7 ஆயிரம் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர் எனவும், ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பயணிகளே வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் கறித்து வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அச்சம் கொண்டுள்ளனர் எனவும் …
Read More »கொக்குவில் பகுதியில் ஒருவர் கைது
யாழ்ப்பாண – கொக்குவில் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது வன்முறைகளில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சந்தேகத்துக்கு இடமான சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு பட்டவர் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு ஊடகவியலாளர் விளக்கமறியலில்
Read More »வெளிநாட்டு ஊடகவியலாளர் விளக்கமறியலில்
நீர்கொழும்பு பாடசாலை ஒன்றில் பலவந்தமாக நுழைய முற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் சித்திக் அஹமட் தனிஷ் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More »பல்வேறு சந்திப்புகளை நடத்தி வரும் சிறப்பு தூதுவர்..
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அறிவித்துள்ளது. நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டது. இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, ஐக்கிய நாடுகளின் நாகரீகங்களின் கூட்டணிக்கான விசேட உயர் பிரதிநிதி மிகுஏல் ஏஞ்சல் மொரனினோஸ், இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று கொழும்பில் குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட …
Read More »வடக்கிற்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம்….!
வடக்கிற் மீண்டும் இராணுவ பாதுகாப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொழும்பு நீர்கொழும்பு சம்மாந்துறை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தீவிரவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையினால் நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வடக்கிற்கும் இராணுவ பாதுகாப்பு அவசியமாகின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
Read More »