நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்வதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!
Read More »பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!
இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சி இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மீது எவ்வித வேறுபாடுகளுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி
Read More »வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி
நாட்டையே உலுக்கிய 8 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தியாகின்றது. கடந்த 21 ஆம் திகதி காலை 8.45 முதல் 9.30 வரையான காலப்பகுதியில் கொச்சிக்கடை புனித அந்தோனியார், மட்டக்களப்பு சீயோன் மற்றும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் ஆகிய தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அத்துடன் கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டிய சினமன் கிரேன்ட் ஆகிய விருந்தகங்களை …
Read More »ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கை
இன்றைய ஆராதனைகளை வீடுகளில் இருந்து மேற்கொள்ளுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களை கோரியுள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளை இன்று காலை எட்டு மணிமுதல் ஹிரு டி.வில் நேரடியாக ஒளிபரப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More »அதிகரித்த காற்று வீசக் கூடும்…
வங்காளவிரிகுடாவை அருகில் ‘பொனீ’ என்ற சூறாவளி காரணமாக இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மழை மற்றும் அதிகரித்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழை வீpழ்ச்சி பதிவாகக் கூடும் என …
Read More »இரு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டது
தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More »தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மீட்பு..
அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கியை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு உருண்டைகள் பொருத்தப்பட்ட தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இவை மீட்கப்பட்டன. இதேவேளை, திருகோணமலை – நிலாவெளி – இரக்ககண்டி பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உந்துருளியில் பயணித்த ஒருவரை சோதனைக்கு …
Read More »சாய்ந்தமருது தாக்குதலில் பலியாகிய 6 பேர் தொடர்பில் வௌிவந்துள்ள தகவல்!
கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடர்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார். அங்கிருந்து 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களுமாக மொத்தம் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என்று நம்பப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு அந்த …
Read More »சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவர் கைது
நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது தம்புள்ள பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பலபிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நாடமாடி இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த …
Read More »காத்தான்குடி பிரதேசம் சுற்றிவளைப்பு
மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசம் விசேட அதிரடிப் படை மற்றும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 15 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் காத்தான்பகுடி பிரதேசமும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று …
Read More »