இலங்கை

இலங்கை

359 பேர் அல்ல … 253 பேர் – தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றி இலங்கை அரசு புதுத் தகவல் !

359 பேர் அல்ல

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 அல்ல என்றும் 253 பேர் என்றும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் …

Read More »

கொழும்பில் 46 வாள்களுடன் ஒருவர் கைது

கொழும்பில்

கொழும்பு – கொம்பனி வீதியில் 46 வாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More »

ஷங்ரில்லா குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது

ஷங்ரில்லா

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கண்டியில், சந்தேகத்துக்குரிய மகிழுந்து ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், குறித்த மகிழுந்தானது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் அக்கரைப்பற்றுக்கு சென்றதாகவும், எனினும், அன்றைய தினம் …

Read More »

ஊடகவியலாளர் சந்திப்பில் சீறிய அமைச்சர் பாட்டளி

ஊடகவியலாளர்

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எதிராக தராதரம் பார்க்காது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேரை கைது செய்து, நாட்டிலிருந்து ஐ.எஸ் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை குண்டுதாரியொருவரின் அவுஸ்திரேலிய உறவு உறுதி …

Read More »

அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேரை கைது செய்து, நாட்டிலிருந்து ஐ.எஸ் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

அடிப்படைவாத தீவிரவாதிகள்

இடம்பெற்ற கோர சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பு பலவீனமடையச் செய்யப்படுகின்றமைக்கு எதிராக தாம் முன்னின்றமை காரணமாகவே, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், …

Read More »

பயங்கரவாதி சஹ்ரான் ஹசிமின் உரைகளை தடை செய்ய இந்தியா நடவடிக்கை

பயங்கரவாதி

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா மற்றும் …

Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!

மட்டக்களப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயமடைந்த 73 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் …

Read More »

கொழும்பில் 21 கைக்குண்டுகளுடன் மூவர் கைது

கொழும்பில்

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் மூன்று பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா? நாஞ்சில் …

Read More »

குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

ரணில் விக்ரமசிங்க

2016 ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் போர் பயிற்சி மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலரே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

Read More »

சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

வெடிப்பு சம்பவம்

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் …

Read More »