இலங்கை

இலங்கை

யாழ்ப்பாணதில் இளைஞன் தற்கொலை

மீசாலை

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் இன்று (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

மரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்!!

மோட்டார் சைக்கிள்

கண்டி கொலாங்கொட பிரதேசத்தில் 29 ஆம் கால்வாய் பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த நிலையில் பாய்ந்து மரக்கொப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தெய்வாதீனமாக தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

இடி வீழ்ந்து பற்றி எரிந்த தென்னைகள்-தீயணைப்புப் படை விரைவு!!

தென்னைகள்

யாழ். மாநகரம் மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது. யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி …

Read More »

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி

மின்னலால்

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். மாலை வேளை மழை பெய்வதன் காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார். இந்த மின்னல் தாக்குதலில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் …

Read More »

மட்டு போதனா வைத்தியசாலையில் அலட்சியம்

மட்டு போதனா வைத்தியசாலை

மட்டு போதனா வைத்தியசாலையில் விடுதி இல 22 நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அலட்சியம். அவ் விடுதியில் இருந்து நோய் குணமாகி வீடு செல்லும் நோயாளிகளுக்கு அவ் விடுதியில் உள்ள வைத்தியர்கள் மாலை 4,5 மணிக்கு பின்னரே அவர்களுக்குரிய நோய் நிர்ணய அட்டை மற்றும் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகள் எடுக்கும் அட்டை போன்றவற்றை எழுதி கொடுக்கின்றனர். இதனால் தூர பிரதேசத்தில் இருந்து வரும் மக்கள் மருந்து வகைகளை எடுத்து வெளியேறும் போது …

Read More »

புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

மக்கள் போராட்டம்

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், …

Read More »

வவுனியா பண்டாரிகுளத்தில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

பாடசாலை மாணவன்

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்ததுடன் தந்தையார் (கிராமசேவையாளர்) கடமை நிமித்தம் அவரது பணிக்கு சென்றிருந்த சமயத்தில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தனிமையில் பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்துள்ளார். மதியம் 11.30 மணியளவில் தந்தை மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் மகன் தொலைபேசி …

Read More »

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் கொலை

திருகோணமலை

திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை தபால் நிலைய வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கதுரை தனுசன் (21 வயது) என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு கொலையாளியும் குறித்த இளைஞனும் மோட்டார் வண்டியில் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து குறித்த கொலையாளி கூரிய ஆயுதம் ஒன்றினால் இளைஞனின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதனையடுத்து காயப்பட்டவர் தான் தப்பித்துக்கொள்வதற்காக வெற்றுக்காணியிலிருந்து …

Read More »

முதியவரை மோதித் தள்ளிய மோ.சைக்கிள்

சாவகச்சேரி

வீதியோரமாக நடந்து சென்ற முதியவரை வேகமாக வந்த உந்துருளி மோதித் தள்ளியது. இந்த விபத்தச் சம்பவம் சாவகச்சேரி நகரப் பகுதியில் இடம்பெற்றது காயமடைந்த முதியவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி கற்குளியைச் சேர்ந்த முதியவரே விபத்தில் காயமடைந்தார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை

இலங்கையில்

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடந்த …

Read More »