இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்தபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டில் நிலைமை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Read More »முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் – புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவிப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் தான் வவுணதீவில் காவல்துறையினரைக் கொலை செய்தனர் என கூறப்பட்டது ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என தெரிய வந்திருக்கின்றது. …
Read More »எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் .
ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகவுள்ளன.
Read More »நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ஆட்சி காலத்தில் இந்தியா …
Read More »ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரனைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் …
Read More »யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்
இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த ஒன்றியத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனரின் வழக்கு விசாரணைகளை நிறைவுறுத்தல் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கற்றல் செயற்பாடு புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. இந்த கற்றல் செயற்பாடு …
Read More »இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு எட்டு பெண்கள் கைது
கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத தசை பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு எட்டு பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்கள்,மொரட்டுவை,கருவலகஸ்வெவ,கதிர்காமம்,பாதுக்கை,சாலியவெவ மற்றும் பண்டாரவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர்,புத்தளம் பகுதியை சேர்ந்தவருடன்,அவர்கள் இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!
கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு வழிசமைத்து, காவற்துறை மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் 31ம் திகதி உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. எனினும் அவர்கள் சார்பில் …
Read More »விடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் இந்த பணி இடம்பெற்று வருகின்றது. அங்கு தடயவியல் பிரிவினரும் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி …
Read More »கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Read More »