தமிழகம்

தமிழகம்

லஷ்மி ராமகிருஷ்ணனை நம்பி ஏமாந்த மக்கள் – தங்க நகை சீட்டு மோசடி !

லஷ்மி ராமகிருஷ்ணனை நம்பி ஏமாந்த மக்கள்

சென்னையில் உள்ள பிரபல தங்க நகைக்கடையான கே எஃப் ஜே தங்க நகை சீட்டு என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் , வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கிளை பரப்பியுள்ளது கேரளா பேஷன் ஜுவல்லரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்க நகைக்கடன் சீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் விளம்பரத் தூதுவராக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிப் லஷ்மி ராமகிருஷ்ணன் …

Read More »

என்னிடம் மிகவும் அன்பாக பேசுபவர் ஜெயலலிதா! – மனம் திறந்த சீமான்

ஜெயலலிதா

ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து தன்னிடம் ஜெயலலிதா பேசியதாக சீமான் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதிமுக மற்றும் மற்ற கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ”ஜெயலலிதாவை நான் நேரில் சந்தித்தபோது என்னிடம் மிகவும் கனிவோடும், அன்போடும் பேசினார். ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து நிறைய விஷயங்கள் …

Read More »

நான்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…!

நான்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை, சென்னையின் புறநகர் பகுதிகளை தண்ணீரில் மிதக்க வைத்தது. செம்மஞ்சேரி எழில்முகா நகர், ஜவஹர் நகர் பகுதி முழுவதும் தண்ணீர் …

Read More »

சென்னை கடற்கரைகளில் 4-வது நாளாக ஒதுங்கும் நச்சுக்கழிவு நுரை…!

சென்னை

சென்னை கடற்கரைகளில் தொடர்ந்து 4-வது நாளாக நச்சுகழிவு நுரை கரை ஒதுங்கி வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக சென்னையின் மையப்பகுதியில் ஓடும் அடையாறு, கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்று நீருடன் கழிவுநீர் கலந்து கடலில் கலப்பதால், கடந்த 4 நாட்களாக சென்னையில் பட்டினம்பாக்கம் கடற்கரை முதல் திருவான்மியூர் வரையிலான கடற்கரையில் பனி போன்ற நுரை படர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய …

Read More »

சென்னையில் மிதமான மழை தொடரும்… அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை ரிப்போர்ட்…!

வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி திண்டுக்கல் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து …

Read More »

விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்புங்கள்: கலெக்டர் உத்தரவு

கலெக்டர்

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடுமுறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சுமார் 500 பேர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு …

Read More »

தமிழகத்தை புரட்டி போடும் மழை! வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!

தமிழகத்தை புரட்டி போடும் மழை

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலையிலிருந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த ஷேக் அலி என்பவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னைக்கு …

Read More »

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார் சீமான்: இலங்கை தமிழ் எம்பி கண்டனம்

சீமான்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என திரும்ப திரும்ப கூறி வரும் சீமான், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார் என இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தார். அங்கு அவர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை சந்தித்து பேசினார். அதன்பிம் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘பலவிதமான …

Read More »

கையில் கொடி ஏந்தியப் படி பாஜகவில் இணைந்த சர்ச்சை பிரபலம்!

பாஜக

நடிகர் ராதா ரவி, அதிமுகவில் இருந்து விலகி சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் கொலையுதிர்க்காலம் படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து தாகத முறையில் பேசியது சர்ச்சைக்குள்ளாகியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராதாரவியின் அருவருப்பான அந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க …

Read More »

லிஸ்ட் போட்டு தூக்குவேன்!: பிரச்சாரமா? மிரட்டாலா? – சீமானுக்கு குவியும் கண்டனங்கள்!

சீமான்

நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் சீமான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனது கட்சி கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டல் விடுக்கும் தோனியிலும் சீமான் பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்ற முறை தமிழ் தெரியாதவர்களை கட்டி வைத்து அடிப்பேன் எனவும், ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் எனவும் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர்மீது …

Read More »