தமிழகம்

தமிழகம்

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்துவிடுங்கள்.. கட்சி மீது வழக்கு தொடர்பவர்களிடம் சீமான் ஆவேசம்..!

சீமான்

நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்பவர்கள் மற்றும் தொண்டர்களை கைதுசெய்பவர்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொலை செய்துவிடுவோம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழப்போரின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. …

Read More »

நித்யானந்தாவிடம் சக்தி இல்லை: வசியக்கல் உண்டு! – நித்தியின் நண்பர் தகவல்

நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு தனிப்பட்ட சக்தி இல்லை, அவர் சித்து வேலைகளை செய்ய வசியக் கல் தான் காரணம் என திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து போது, கிராபிக்ஸ் வேலை செய்யும் குழுவை வைத்துக் கொண்டு தனது வீடியோக்களில் கிராபிக்ஸ் காட்சிகளைப் பதிவு செய்து வெளியிடத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகின. …

Read More »

உறவுகளில் திருமணம் செய்வதால் ஊனம் அதிகரிப்பு : தமிழ்நாடு இரண்டாமிடம்..!

திருமணம்

தமிழகத்தில் மாற்று திறனாளிகளாக இருப்பவர்களில் 24 .5 சதவீதத்தினரின் பெற்றோர், உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்கள் என்பது, மத்திய அரசின் ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது. சொந்தமும் சொத்தும் விட்டு போகக் கூடாது என்று உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது. இந்த வழக்கத்தால் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது ஆய்வுகள் மூலமாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதனை மீண்டும் உறுதிசெய்யும் விதமாக அமைந்துள்ளது மாற்றுத்திறனாளிகள் …

Read More »

அதிமுகவுக்கு கன்னிவெடி வைத்து காத்திருக்கும் பாஜக?

அதிமுக

உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் போட்டியிட பாஜக விரும்புகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அரசாணையை பிறப்பித்துள்ளது அதிமுக அரசு. இது ஆளும் கட்சிக்கு …

Read More »

இன்று முதல் தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி..

தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று முதல் தொடக்கம். தமிழகத்தில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன. இதில் முன்னதாக விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டிருந்த கள்ளக்குறிச்சி இன்று முதல் தனி மாவட்டமாகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிர்வாக பணிகளை இன்று முதல்வர் எடப்பாடி தொடங்கிவைக்கிறார். மேலும் அந்த விழாவில் அரசின் நலத்திட்டங்களையும் மக்களுக்கு வழங்குகிறார். முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி சமீபத்தில் தனி …

Read More »

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக-திமுகவின் திடீர் கூட்டணி

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் இரண்டு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்பவில்லை என்று கருதுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சி தோற்றாலும் அந்த கட்சிக்கு சட்டமன்றத் …

Read More »

அதுபோன்ற காட்சிகள் வேண்டாம்…! நடிகர்களுக்கு முதல்வர் விடுத்த வேண்டுகோள்

எடப்பாடி பழனிசாமி

தீயப் பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, நடிகை காஜல் அகர்வால், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, ஆர்.வி உதயகுமார் உள்பட …

Read More »

டம்மி மம்மி சசிகலா? வெளிய வந்தாலும் ஒன்னும் தேராது போலயே…

சசிகலா

அதிமுகவில் திடீரென சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது சசிகலாவை டம்மி ஆக்கும் விதமாக அமைந்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை …

Read More »

ராமேஸ்வரம் கோயிலுக்குள் புகுந்தது மழை நீர். பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்

கனமழை காரணமாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். வெப்பசலனம் காரணமாக சமீப நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகமான ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதியிலுள்ள சாலைகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. ராமேஸ்வரம் கோவில் மற்றும் அதன் உப கோவிலான லட்சுமண ஈஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில்கள் ஆகியவற்றை மழை நீர் …

Read More »

15 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படுகிறது..!!

பெண்

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது . கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளையிட் உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குனர் டாக்டர் ரத்தின ரூபா இதனைத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதைத் தடுக்க சர்வதேச அளவில் பல்வேறு சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. இதுதொடர்பாக சமூக அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் …

Read More »