கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா! கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நாடுகளில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன …
Read More »உலகின் இளம் பிரதமருக்கு அறிவுரை கூறிய உலகின் மூத்த பிரதமர்
பின்லாந்து நாட்டின் இளம் பிரதமராக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்பவர் உலகின் இளம் பிரதமராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளார். இவர் இன்னும் ஓரிரு நாளில் பிரதமர் பதவியேற்கவுள்ள நிலையில் இவருக்கு வயது வெறும் 34 என்பது குறிப்பிடத்தக்கது பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக …
Read More »லண்டனில் தொடரும் கத்துக்குத்து தாக்குதல்: இருவர் பலி!
லண்டனில் உள்ள பிரபல பாலத்தில் நடந்த கத்துக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பாலத்தில் வழக்கம்போல மக்கள் சென்றுக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது திடீரென அங்கு தோன்றிய மர்ம நபர் ஒருவர் கத்தியால் மக்களை சராமரியாக தாக்க தொடங்கினார். அவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இந்த சம்பவம் அறிந்து உடனடியாக லண்டன் பாலத்துக்கு விரைந்த போலீஸார் …
Read More »இம்சை அரசன் வடிவேலுவாக மாறிய அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குத்துச்சண்டை வீரராக போட்டோஷாப் செய்யப்பட்ட தன் படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். சில்வஸ்டர் ஸ்டாலோன் குத்துச்சண்டை வீரராக நடித்த ராக்கி படத்தில் இடம்பெற்ற அவரது புகைப்படத்தை போட்டோஷாப் செய்து அதில் ட்ரம்ப் முகத்தை பொருத்தியுள்ளனர். இதில் கைகளில் குத்துச்சண்டைக்கான கையுறைகளை மாட்டிக்கொண்டு நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில மணி நேரத்தில் அவரைப்பற்றி ஏராளமான மீம்ஸ்கள் …
Read More »அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடதுருவ பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை பெரும் நிலநடுக்கம் உண்டானது. ரிக்டர் அளவில் 6.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையும் பாருங்க : …
Read More »தென் கொரியாவில் ரத்த ஆறாக காட்சியளித்த இம்ஜின் ஆறு
தென் கொரியாவில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பன்றிகளால், ரத்த ஆறு உருவாகி இணையத்தில் பரவலாக பேசபட்டது, என்னதான் நடந்தது? ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் சமீபகாலமாகத் தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் பன்றிகளை மிகவும் எளிதாகத் தாக்கி, பிற விலங்குகளுக்கும் பரவும் தன்மைகொண்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகள் இறுதியில் இறப்பை மட்டுமே சந்தித்து …
Read More »கீழே விழுந்து நொறுங்கியது போர் விமானம்..
கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போர் விமானங்கள் கட்டுபாடை இழந்து கீழே விழுந்து நொறுங்கும் சம்பவங்கள் இந்தியாவில் ஆங்காங்கே சமீப காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் கோவாவில் மிக் 29 கே என்ற போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. எனினும் இந்த விபத்தில் …
Read More »ஆணுடன் ஆண் பாலுறவால் பரவியது டெங்கு: அதிர்ச்சி தகவல்
டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு கொசுவால் மட்டுமே பரவும் இன்று இதுவரை மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் பாலுறவு கொண்டாலும் டெங்கு பரவும் என்ற அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் ஒருவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு வைரஸ் பரவியதை உறுதி செய்தனர். ஆனால், அவர் …
Read More »ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் இம்ரான்கான்
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் ரூபாய் கோடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார பிரச்சினையை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகின்ற நிலையினை காரணம் காட்டி, இம்ரான்கான் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் ஒன்றுக் கூடி ஆசாதி மார்ச் என்ற பெயரில் நாடு …
Read More »புலிகளை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்..!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன் வைக்காத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவையை மேற்கோள் காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை , கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ …
Read More »