உலகம்

உலகம்

நாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு?

நாடெங்கும்

நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏதோவொரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது. அதன் பிறகு இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால், நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அந்நிறுவனத்தினர். தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் போலீஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர …

Read More »

கூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்

காதலர்கள்

ஹாங்காங்கில் உள்ள கைதிகளை சீனாவுவில் உள்ள சிறைகளுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் காதலர்கள் சிலர் வீட்டுக்கே போகாமல் சாலைகளில் படுத்து உறங்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. ஹாங்காங் புதியதாக கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்கள் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், ஹாங்காங் மீண்டும் சீனாவிடமே அடிமைப்படுத்தும்படியும் இருக்கிறது என கூறி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், அரசு …

Read More »

ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது: டிரம்ப் கொந்தளிப்பு!

செனட் சபை

சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் …

Read More »

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானின் யமகட்டா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானில் உள்ள யமாகாட்டா மாகானத்தில் ரிக்டர் 6.5 அளவிற்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் யமகாட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. கடந்த 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்:11 பேர் பலி

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சிக்குவான் மாகாணம். அந்த பகுதியில் திடீரென்று நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் மையப்புள்ளியிலிருந்து 16 கி.மி. ஆழத்தில் தோன்றிய இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்ததாகவும் 112 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவசர …

Read More »

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …மக்கள் அதிர்ச்சி

நியூசிலாந்தில்

நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து …

Read More »

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

எந்த நாட்டில் தெரியுமா

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்னர் இலவச டேட்டா முதல் …

Read More »

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் வேண்டுகோள்

போப்

சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது …

Read More »

இளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் டாக்டர் !

இளைஞரின்

தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் மருத்துவர் வேலை செய்துவந்தார். அவரை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவனிடமிருந்து தப்பிச் செல்ல நினைத்த மருத்துவர் அவனது நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெண்மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு வாலிபர் , அவரை …

Read More »

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கூப்பர்

இலங்கைக்கான

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அடுத்தவாரம் இலங்கை வந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார். அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்திக்கவுள்ள அவர், பாதுகாப்பு, சமாதனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Read More »