எடப்பாடி பழனிசாமி

அனைவரது வாழ்விலும் நலங்களும் வளங்களும் பெருகட்டும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என்றும், அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த தீபாவளி திருநாள் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை எண்ணெய் குளியல் முடித்து, புத்தாடைகள் அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி, உற்றார், உறவினர்களுடன் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பகிர்ந்து உற்சாகத்துடனும், குதூகலத்துடனும், தீபாவளியை கொண்டாடி மகிழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என்றும், அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் தனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்வதாக கூறியுள்ளார்.

இதையும் பாருங்க :

பிகில் – விமர்சனம்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …