இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அவர்களிடம் தமிழகத்தில் முதலீடு செய்ய பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்த நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் ரூ.1580 கோடி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் இந்த ரூ.1580 கோடி தமிழக அரசு பேருந்து துறையை முதலீடு செய்யப்படும் என்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபரின் இந்த அறிவிப்பால் தமிழக அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் பிரதமரை தமிழகத்தை சேர்ந்த ஒரு குரூப் ‘கோபேக் மோடி’ என்று கூறி வந்தபோதிலும், தமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசி ரூ.1580 கோடி முதலீட்டை பிரதமர் பெற்றுத்தந்துள்ளதாக பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
அதேபோல் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க டீசல் பேருந்துக்கு பதில் மின்னணு பேருந்துகள் போன்ற நல்ல வழியை காணவேண்டும் என்றும் அதற்கான திட்டம் தயாரானால் அந்த திட்டத்திற்கும் ஜெர்மனி நிதியுதவி செய்யும் என்றும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதையும் பாருங்க :
சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்
வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!