அந்தரங்கங்களை ஒட்டு கேட்கிறதா கூகுள்?

அந்தரங்கங்களை ஒட்டு கேட்கிறதா கூகுள்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகின்றதோ, அந்த அளவுக்கு தனிமனிதர்களின் அந்தரங்கங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.

ஸ்மார்ட்போன் மூலம் நம்மில் பலருடைய அந்தரங்கங்கள் வெளியே வந்து கொண்டிருப்பதை அவ்வப்போது செய்திகள் மூலம் தெரிந்து வருகிறோம்

இந்த நிலையில் கூகுள் நிறுவனமே தங்களது பயனாளர்களின் அந்தரங்க உரையாடல் உள்பட பலவிஷயங்களை ஒட்டு கேட்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் தங்களது பயனாளிகளுக்கு அளித்திருக்கும் பல்வேறு வசதிகளில் ஒன்று ‘வாய்ஸ் ரெகோகனைசன்’.

இதன்மூலம் நாம் பேசுவதை அப்படியே எழுத்துகளாகப் பதிவு செய்ய முடியும். ஒரு மெசேஜ் அனுப்புவதற்கு டைப் அடிக்க தேவையில்லை.

அந்த மெசேஜை வாய்ஸ் மூலம் நாம் சொன்னால் இந்த செயலி அதை டெக்ஸ்ட்டாக மாற்றி தரும்.

இந்த நிலையில் இந்த’வாய்ஸ் ரெகோகனைசன் வசதியில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வர கூகுள் நிறுவனம் வி.ஆர்.டி. நியூஸ் என்ற நிறுவனத்திடம் ஆய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது.

இந்த நிறுவனம் கூகுள் வாய்ஸ் ரெகோகனைசனின் பதிவாகிய சுமார் 1,000 குரல் பதிவுகளை எடுத்து ஆய்வு செய்துள்ளது.

இதில் பயனாளர்களின் முகவரிகள், கணவன் – மனைவி இடையேயான அந்தரங்க விவாதங்கள் உள்பட பல உரையாடல்கள் இருக்கின்றதாம்.

இந்த பதிவுகளை ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்த உள்ளதாக கூகுள் மற்றும் வி.ஆர்.டி. நியூஸ் நிறுவனங்கள் கூறியிருந்தாலும் கணவன், மனைவி அந்தரங்க உரையாடல் உள்பட பயனாளிகளின் அனுமதியின்றி பயன்படுத்துவது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …