அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானா டிரம்புக்கும் பிறந்த 3 வது குழந்தை எரிக்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு லாரா என்பவரை திருமணம் செய்தார்.
இந்த தம்பதியினருக்கு எரிக் கியுக் என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிடவுள்ளார்.
இதற்காக வேலைகளில் 2வது முறையாக கர்பமுற்ற லாரா தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.
கடந்த மாதம் டிரம்புக்காக மகளிர் என்ற நிகழ்ச்சியில் கூட நடனமாடி விருந்தினர்களை வரவேற்றார்.
இவரது நடனம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் எரிக் – லாரா தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இக்குழந்தைக்கு கரோலினா டோரதி டிரம்ப் எனப் பெயரிட்டுள்ளனர்.
இக்குழந்தை டிரம்பின் 10வது பேரக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்க்து.
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,