HDFC வங்கி

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அதிக வாடிக்கையாளர்கள், கடன் வழங்கும் முறை, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம் ஆகியனவே HDFC வங்கியின் பலம் ஆகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வங்கித்துறை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் சூழலில் உச்சத்தை நோக்கி முன்னேறி ஆச்சர்யப்படுத்தி வருகிறது HDFC வங்கி.

இந்தியாவின் முன்னனி வங்கிகளுள் HDFC வங்கியும் ஒன்று. தற்போதைய பொருளாதார மந்தநிலையான சூழலில் நாட்டிலேயே வளமான வங்கியாக HDFC உள்ளது. பொருளாதார ஏற்ற இறக்கங்களில் சிக்காமல் HDFC வங்கியின் பொருளாதார நிலையும் பங்கு வர்த்தகமும் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

வங்கித்துறை வீழ்ச்சியையும் பொருட்படுத்தாத வெற்றியைப் பெற்றுள்ள HDFC வங்கியின் மீதே முதலீட்டாளர்கள் அதிகப்படியாக முதலீடு செய்து வருவதும் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

HDFC வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். சர்வதேச அளவிலும் இந்த வளர்ச்சி மிரட்சியுடன் பார்க்கப்பட்டு வருகிறது.

”பொருளாதார மந்தநிலையிலும் வலுவான வங்கிகள் இன்னும் வலுவானதாகவே மாறும்” என்கிறார் லண்டன் மெரியன் க்ளோபல் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் நிக் பேன்.

அதிக வாடிக்கையாளர்கள், கடன் வழங்கும் முறை, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம் ஆகியனவே HDFC வங்கியின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்

About அருள்

Check Also

Farmermart

காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஉணவுச்சந்தையில் ஃப்ளிப்கார்ட்- Farmermart காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்! ஃப்ளிப்கார்ட் இந்தியாவில் சில்லரை வியாபாரிகள், உள்ளூர் விவசாயிகளுடன் …