அமெரிக்க

அமெரிக்க ராணுவத்தில் இசைத்த இந்திய தேசிய கீதம்..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்திய மற்றும் அமெரிக்கா ராணுவ கூட்டு பயிற்சி நிறைவு நாளில், ராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி அமெரிக்காவின் லூயிஸ் மெக்கார்ட் பயிற்சி மையத்தில், அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி துவங்கியது. இந்த பயிற்சி நேற்று நிறைவு பெற்றதன் நிலையில், அமெரிக்கா ராணுவ இசைக்குழுவினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர் ரன்பிர் கவுர் என்ற பெண் அதிகாரி, ”நான் இந்தியாவில் பிறந்தாலும், 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்பு 2003 முதல் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

மேலும் இந்த பயிற்சியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ராணுவத்தினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கவின் பற்றி அன்றே சொன்ன அவரது நண்பர்.! வைரலாகும் வீடியோ.!

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …